"மரம் நடுவது பூமியைக் காப்பாற்ற மட்டுமல்ல…
சில உண்மைகளை உயிருடன் புதைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது."
அத்தியாயம் 13 – “1986 : முதல் விதை”
ஆலமரத்தின் வேர்கள் மெதுவாக ஒளிர்ந்தன.
அந்த ஒளி…
அர்ஜுனின் கண்களை மூடியது.
சில விநாடிகள்…
முழு அமைதி.
பிறகு…
மழை பெய்யும் சத்தம்.
பறவைகளின் குரல்.
மண் நறுமணம்.
அவன் கண்களைத் திறந்தான்.
அது ஆய்வகம் இல்லை.
அதே இடம்…
ஆனால் 48 ஆண்டுகளுக்கு முன்பு.
அடர்ந்த காடு.
மரங்கள் வானத்தை மறைத்திருந்தன.
புலிகள், மான்கள், மயில்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன.
அர்ஜுன் தனது கையை ஒரு மரத்தின் மீது வைத்தான்.
அதை உணர முடிந்தது.
“இது கனவு இல்ல…”
ROOT-இன் குரல் மெதுவாக ஒலித்தது.
“இது நினைவு.”
“இந்த மரம் பார்த்ததை…
நீ பார்க்கிறாய்.”
தொலைவில்…
நான்கு ஜீப்புகள்.
அவற்றிலிருந்து விஞ்ஞானிகள், வனத்துறை அதிகாரிகள், நிலவியல் நிபுணர்கள் இறங்கினர்.
அவர்கள் ஒரு பெரிய வரைபடத்தை விரித்தனர்.
ஒரு முதிய விஞ்ஞானி சொன்னார்:
“இங்கே சுரங்கம் தோண்டினா…
நாட்டுக்கு 50 வருடத்துக்கு போதுமான அரிய கனிமம் கிடைக்கும்.”
அனைவரும் கைதட்டினர்.
ஆனால்…
ஒரு பெண் விஞ்ஞானி மட்டும் அமைதியாக நின்றாள்.
அவள் பெயர்…
டாக்டர் ஆனந்தி.
“ஒரு நிமிஷம்…”
அவள் மண்ணை எடுத்துப் பரிசோதித்தாள்.
பிறகு அருகில் இருந்த ஓடையிலிருந்து தண்ணீரை எடுத்தாள்.
சில இரசாயன சோதனைகள்.
அவளது முகம் வெளிறியது.
“இந்த இடத்தை யாரும் தொடக்கூடாது.”
“ஏன்?”
“இங்க இருக்குற மண்…
சாதாரண மண் இல்ல.”
அனைவரும் அவளைப் பார்த்தனர்.
அவள் ஒரு வரைபடத்தை எடுத்தாள்.
“இந்தக் காட்டுக்கு அடியில்…
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி நீர்ப்படுகை இருக்கு.”
“இங்க சுரங்கம் தோண்டினா…”
அவள் குரல் நடுங்கியது.
“தமிழ்நாட்டின் பாதி மாவட்டங்கள் 30 ஆண்டுகளுக்குள் குடிநீரை இழந்துவிடும்.“
அறை முழுவதும் அமைதி.
ஒரு அதிகாரி சிரித்தார்.
“அவ்வளவுதானா?
இன்னொரு இடத்துல இருந்து தண்ணீர் கொண்டுவரலாம்.”
டாக்டர் ஆனந்தி கோபமாகச் சொன்னாள்.
“தண்ணீரை கொண்டு வரலாம்…”
“ஆனா ஒரு உயிரியல் அமைப்பை உருவாக்க முடியாது.“
அர்ஜுன் கவனித்தான்.
அந்தப் பெண் விஞ்ஞானி…
அவன் பார்த்த எல்லா ஆவணங்களிலும் பெயரே இல்லாதவர்.
வரலாற்றிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டவர்.
அன்று மாலை…
அதே விஞ்ஞானிகள் ரகசியமாக மீண்டும் சந்தித்தனர்.
டாக்டர் ஆனந்தி ஒரு சிறிய ஆலமரக் கன்றை எடுத்தாள்.
“நமக்கு நேரம் இல்லை.”
“என்ன செய்யப் போறீங்க?”
அவள் அமைதியாகச் சொன்னாள்.
“காட்டை சட்டத்தால் காப்பாற்ற முடியல.“
“அதனால…
உண்மையால காப்பாத்தப் போறோம்.“
அவள் அந்த ஆலமரத்தை நட்டாள்.
அதன் கீழ்…
ஒரு சிறிய உலோகக் குழாய்.
அதற்குள்…
ஆவணங்கள்.
நீரியல் வரைபடங்கள்.
மண் மாதிரிகள்.
ஆய்வுத் தகவல்கள்.
அனைத்தையும் வைத்தாள்.
பிறகு சொன்னாள்.
“ஒரு மரத்தை வெட்டுறது சுலபம்.”
“ஆனா…”
“ஒரு காட்டை முழுசா அழிக்க முடியாது.“
அர்ஜுன் திடீரென உறைந்தான்.
அவன் கவனித்தான்.
அந்தக் குழுவில்…
ஒரு மனிதர் அமைதியாக எல்லாவற்றையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அவரது முகம் மெதுவாகத் திரும்பியது.
அர்ஜுனின் மூச்சு நின்றது.
அவர்…
அவனது தந்தை அல்ல.
ஆனால்…
அவனது தந்தையைப் போலவே இருந்தார்.
அவரது சட்டையில் ஒரு பெயர் அட்டை.
“ராமநாதன் – 1”
அந்த நொடியில் ROOT-இன் குரல் மீண்டும் ஒலித்தது.
“இப்போதுதான் கதை ஆரம்பிக்கிறது, அர்ஜுன்…”
“நீ இதுவரை மரங்களைப் பற்றிய உண்மையைத் தேடினாய்.
இனி…
மனிதர்கள் ஏன் காடுகளைப் பயப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறாய்.”
காடு முழுவதும் திடீரென…
சங்கிலி அறுக்கும் சத்தம் கேட்டது.
யாரோ…
முதல் மரத்தை வெட்ட வந்துவிட்டனர்.
அத்தியாயம் 13 முடிவு
