வனம் – வேர்களின் சாட்சி

"மரம் நடுவது பூமியைக் காப்பாற்ற மட்டுமல்ல…
சில உண்மைகளை உயிருடன் புதைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது."

அத்தியாயம் 3 – “இருபத்தேழாவது நிழல்”

அர்ஜுனின் விரல்கள் நடுங்கின.

அந்தப் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தான்.

பச்சை நிற மரக்கன்றுகள்…

சிரித்த முகங்கள்…

கைகளில் மண்வெட்டிகள்…

பின்னணியில் ஒரு பெரிய பலகை.

ஆனால் அந்த பலகையின் எழுத்துகள் மட்டும் மங்கலாக இருந்தன.

அவன் கணினியில் புகைப்படத்தை ஸ்கேன் செய்து, படத்தை தெளிவாக்கும் மென்பொருளில் திறந்தான்.

ஒவ்வொரு பிக்சலும் மெதுவாக தெளிவானது.

இறுதியில்…

பலகையில் இருந்த எழுத்துகள் படிக்க முடிந்தன.

“பசுமை மீட்புத் திட்டம் – கட்டம் 0”

அர்ஜுன் திகைத்தான்.

“கட்டம் 0?”

அரசின் எந்த மர நடவு திட்டத்திலும் “கட்டம் 0” என்ற பெயரை அவன் பார்த்ததில்லை. புகைப்படத்தில் இருந்த முகங்களை ஒன்றன்பின் ஒன்றாக அரசுப் பதிவுகளுடன் ஒப்பிட்டான்.

முதல் நபர் – சாலை விபத்தில் மரணம்.

இரண்டாவது – இதயநோயால் மரணம்.

மூன்றாவது – தற்கொலை.

நான்காவது – காணாமல் போனவர்.

இப்படியே…

26 பேர்.

ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்கள்.

ஆனால்…

அனைவரும் இறந்த தேதி மட்டும் ஒரே மாதிரி.

அவர்கள் மரம் நட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள்.

அர்ஜுன் ஆழமாக யோசித்தான்.

“இது சாதாரணம் இல்லை…”

அப்போது…

மீரா அவன் அறைக்குள் ஓடிவந்தாள்.

“அர்ஜுன்!”

“என்ன?”

“நேத்து நீ போன காட்டுல இருந்து ட்ரோன் வீடியோ வந்திருக்கு.”

அவள் கணினியைத் திறந்தாள்.

ட்ரோன் எடுத்த காட்சி.

மரங்கள்…

கற்கள்…

சில நொடிகள் எதுவும் இல்லை.

திடீரென்று…

ஒரு வெள்ளை சட்டை அணிந்த வயதான மனிதர் கேமராவை நேராகப் பார்த்து நின்றிருந்தார்.

“இவர் யார்?”

மீரா வீடியோவை நிறுத்தினாள்.

“பிரச்சனை அதுவில்லை.”

“அப்போ?”

“இந்த ட்ரோன் நேற்று இரவு பறக்கவே இல்லை.”

அர்ஜுன் புரியாமல் பார்த்தான்.

“என்ன சொல்ற?”

“GPS பதிவுப்படி…ட்ரோன் முழு இரவும் அலுவலகத்தில்தான் இருந்தது.”

அறையில் அமைதி. அப்படியானால்…

இந்த வீடியோவை…யார் எடுத்தது?

அந்த வெள்ளை சட்டை அணிந்த மனிதரின் முகத்தை பெரிதாக்கினார்கள்.

அர்ஜுனின் உடல் உறைந்தது.

அவர்…

1986 புகைப்படத்தில் இருந்த 27-வது நபர்.

அதாவது…

உயிரோடு இருப்பதாக எழுதப்பட்ட ஒரே மனிதர்.

ஆனால்…

வீடியோவில் அவர் நின்ற இடத்தில்…

ஒரு நிழல் கூட இல்லை.

சூரிய ஒளி இருந்தும்…

அவருக்கு மட்டும்…

நிழல் இல்லை.

அதே நேரத்தில்…

அர்ஜுனின் மொபைல் ஒலித்தது.

அறியப்படாத எண்.அவன் எடுத்தான்.

மறுமுனையில்…

மிக மெதுவான வயதான குரல்.

“புகைப்படத்தை பார்த்துட்டியா?”

“யார் பேசுறது?”

“மரம் நடுறவன்…
வேரைப் பற்றி தெரிஞ்சிருக்கணும்.”

“நீங்க யார்?”

சில விநாடிகள் அமைதி.

பிறகு…

“நான்…
இருபத்தேழாவது நிழல்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அர்ஜுன் உடனே அந்த எண்ணுக்கு மீண்டும் அழைத்தான்.

திரையில் வந்த பதில்:

“இந்த எண் இதுவரை பயன்பாட்டில் இருந்ததே இல்லை.”

அவன் மெதுவாகத் தலைநிமிர்ந்தான்.

அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே சாலையின் மறுபுறம் அதே வெள்ளை சட்டை அணிந்த முதியவர் நின்றிருந்தார்.

இந்த முறை…அவர் சிரித்துக்கொண்டிருந்தார்.

அர்ஜுன் கதவைத் திறந்து வெளியே ஓடினான். சாலை வெறிச்சோடி இருந்தது.

ஆனால்…

அவர் நின்ற இடத்தில் மட்டும்…

ஒரு சிறிய ஆலமரக் கன்று மண்ணை உடைத்து முளைத்திருந்தது.

அதன் இரண்டு இலைகளுக்கு நடுவே…

ஒரு சிறிய வெள்ளி நிற தகடு.

அதில் ஒரே ஒரு வார்த்தை:

“வேர்…”

அத்தியாயம் 3 முடிவு…

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *